TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச அறிமுக வகுப்பு | செங்கல்வராய அறக்கட்டளையின்கீழ் இயங்கும் செங்கல்வராய நாயக்கர் போட்டித் தேர்வுகள் சிறப்பு பயிற்சி மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்புகள் மார்ச் 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர விரும்பும் மாணவர்கள், வகுப்பு நடைபெறும் நாள் அன்று காலை 10.30 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-26430029 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 98842-93051 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவலை செங்கல்வராய நாயக்கர் போட்டித் தேர்வுகள் சிறப்பு பயிற்சி மைய கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் தெரிவித் துள்ளார்.