தமிழகத்தில், 139 மையங்களில், வனவர், வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான, ‘ஆன்லைன்’ தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 300 வனவர் பணியிடங்களுக்கு, 1.10 லட்சம் பேரும், 878 வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு, 98 ஆயிரத்து, 801 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, ஆன்லைன் முறையில் நடைபெறும் என, வனத் துறை அறிவித்துள்ளது.இதில், வனவர் பணியிடங்களுக்கான தேர்வு, 139 மையங்களில், இன்று துவங்குகிறது. வரும், 9ம் தேதி வரை, இத்தேர்வு நடைபெறும். வனக் காப்பாளர் தேர்வு, 122 மையங்களில், வரும், 10, 11 தேதிகளில் நடைபெறும்.இதற்கான விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு வழிமுறை விபரங்கள், தனித் தனியாக அனுப்பப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
Related Stories
March 4, 2023