
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் சுருக்கமாக டி.எம்.ஆர்.சி.எல். எனப் படுகிறது. நாட்டின் தலைமையிடமும், யூனியன் பிரதேச பெருநகரமுமான டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்டம் பிரமாண்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் தரத்திலான அதிகாரி பணிகள் மற்றும் நான்எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 1,896 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு ஆட்தேர்வின் அடிப்படையில் 88 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 440 இடங்களும், மெயின்டனர் பணிக்கு 1058 இடங்களும் உள்ளன. இவை தவிர அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லீகல் அசிஸ்டன்ட் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்… வயது வரம்பு: அசிஸ்டன்ட் மேனேஜர், ஜூனியர் என்ஜினீயர், மெயின்டனர் பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். கல்வித்தகுதி: பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் தரத்திலான எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காத்திருக்கின்றன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மெயின்டனர் பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் போன்ற பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. தேர்வு செய்யும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் புகைப்படம், கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26-2-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். சென்னை மெட்ரோ சென்னை மெட்ரோ நிறுவனத்தில் சைட் என்ஜினீயர் பணிக்கு 8 இடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றுகளுடன் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 3-2-2018-ந் தேதி கோயம்பேடு மெட்ரோரெயில் நிறுவன வளாகத்தில் நடக்கிறது. காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பெயரை பதிவு செய்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். இதுபற்றிய விவரங்களை http://chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.