
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முன்பாக அறிவித்திருந்த தேர்வுத் தேதியில் மாற்றம் செய்துள்ளது. இதற்கு முன்பு 2025 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது, தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து, TRB தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
-
தாள் – 1 (Paper 1): 15.11.2025 (சனிக்கிழமை)
-
தாள் – 2 (Paper 2): 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை)
என தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை TRB அதிகாரப்பூர்வ இணையதளமான **www.trb.tn.gov.in**-ல் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.