
Quarterly Exam 2025| தமிழகத்தில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி, 26-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் -2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10-ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் பிளஸ் -2 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் என்றும், பிளஸ் -1 வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.