
இந்தியாவின் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான NIRF தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிடுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாடு, கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகள் பெற்றும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 32 கல்லூரிகளுடன் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
பல்துறைகளில் சிறந்து விளங்கும் முதல் 100 இடங்களுக்கான கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகத்திற்கான பட்டியல் தமிழ்நாட்டில் இருந்து 20, கல்லூரிகளுக்கான பட்டியலில் 33, ஆய்வில் சிறந்த கல்லூரிகளில் 7, பொறியியலில் 14, மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் 12, பார்மசியில் 11, மருத்துவத்தில் 8, பல் மருத்துவத்தில் 9, சட்டத்தில் 3, கட்டக்கலை கல்லூரிகளில் 5, விவசாய கல்லூரிகளில் 5, புதுமைகளுக்காக வித்திடும் கல்லூரிகளில் 2, மாநில பல்கலைக்கழகங்களில் 10, நிலையான வளர்ச்சி திட்டத்தில் சிறந்த 2 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 37 கல்லூரிகள் இடம்பெற்ற நிலையில், இந்தாண்டு 33 கல்லூரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் முதலிடத்தை டெல்லி இந்து கல்லூரி, இரண்டாம் இடத்தை டெல்லி மிரண்டா ஹவுஸ், மூன்றாம் இடத்தை டெல்லி ஹான்ஸ் ராஜ் கல்லூரி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து 9வது இடத்தில் கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, 10வது இடத்தில் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் முதல் 10 இடம் பெற்ற கல்லூரிகள்
கல்லூரியின் பெயர் | அகில இந்திய இடம் | மாநில இடம் |
PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் | 9 | 1 |
PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | 10 | 2 |
லயோலா கல்லூரி, சென்னை | 14 | 3 |
மாநில கல்லூரி, சென்னை | 15 | 4 |
மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி, சென்னை | 16 | 5 |
தியாகராஜா கல்லூரி, மதுரை | 20 | 6 |
வி.ஓ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி | 22 | 7 |
செயிண்ட். ஜோசப் கல்லூரி, திருச்சி | 25 | 8 |
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் | 40 | 9 |
ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி, சென்னை | 41 | 10 |
தமிழ்நாட்டின் சிறந்த 10 மாநில பல்கலைக்கழகங்கள்
மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் முதல் 100 இடத்தில் தமிழ்நாட்டில் இருந்து 10 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் முதலிடத்தை கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 10வது இடத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு அளவில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடமும், பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்திலும், அழகப்பா பல்கலைகழகம் மூன்றாம் இடத்த்லும் உள்ளன.
பல்கலைக்கழகம் | அகிக இந்திய இடம் | மாநில இடம் |
அண்ணா பல்கலைக்கழகம் | 2 | 1 |
பாரதியார் பல்கலைக்கழகம் | 10 | 2 |
அழகப்பா பல்கலைக்கழகம் | 14 | 3 |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் | 16 | 4 |
சென்னை பல்கலைக்கழகம் | 18 | 5 |
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் | 31 | 6 |
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி | 33 | 7 |
அண்ணாமலை பல்கலைக்கழகம் | 34 | 8 |
பெரியார் பல்கலைக்கழகம் | 40 | 9 |
தமிழ்நாடு விவாசாய பல்கலைக்கழகம் | 42 | 10 |