
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள GATE 2026 தேர்வில் 3 முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
GATE என்பது Graduate Aptitude Test in Engineering என்பதன் சுருக்கமாகும். இந்தத் தேர்வு, பொறியியல், அறிவியல் மற்றும் பிற பட்டப் படிப்புகளில் உள்ள மாணவர்களின் பொதுவான புரிதலையும், திறமையையும் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்தத் தேர்வை இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) இணைந்து நடத்துகின்றன.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான IITs, IISc, மற்றும் NITs ஆகியவற்றில் முதுகலைப் படிப்புகளான M.Tech, M.E, மற்றும் M.S ஆகியவற்றில் சேர்வதற்கு கேட் மதிப்பெண் அவசியம்.
பொதுத்துறை நிறுவனங்களான (PSUs) (உதாரணம்: BHEL, ONGC, NTPC) பலவும் கேட் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்புகளில் (CSIR) உள்ள உதவித்தொகைகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு கேட் மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை அல்லது வணிகப் படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள்.
2026 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வுக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி ஆகஸ்ட் 28 க்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி கடைசி நாளாகும். தாமத கட்டணங்கள் செலுத்தி அக்டோபர் 9 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும். முடிவுகள் 2026 மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
GATE 2026க்கான விண்ணப்பக் கட்டணம் பெண்கள் /SC/ST /மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழக்கமான விண்ணப்பிக்கும் காலத்திற்கு ஒரு விண்ணப்பம் ரூ.1000 மற்றும் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ஒரு தாளுக்கு ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தாமதக் கட்டணம் இல்லாமல் ரூ.2000 மற்றும் தாமதக் கட்டணத்துடன் ரூ.2500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.