ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக

அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில், ஜனவரி மாதம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது, ‘கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.’அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்’ என, அறிவித்தார்.

அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின்அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையநிதி செலவினம் துறை செயலர்சித்திக் தலைமையில்பிப்ரவரி மாதம்ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.இக்கமிட்டிதங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்துதேவையான பரிந்துரைகளை,ஜூலை, 31க்குள்அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்‘ எனஉத்தரவிடப்பட்டிருந்தது. எனவேஇன்று கமிட்டி சார்பில்அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்புஅரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.