தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன் | தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி செல்லும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் வேண்டும் என நினைப்பதால் தான் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.