Kalvi News

தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது

‘தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்’ ”தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது,” என கேந்திரிய வித்யாலயா சங்கதன், சென்னை மண்டல துணை கமிஷனர் மணி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: சென்னை மண்டலத்தில், புதுச்சேரி உட்பட, 50, கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது, வெளியான பிளஸ் 2 தேர்வில், ஐ.சி.எஸ்.இ., – என்.சி.இ.ஆர்.டி., பாடப்பிரிவு பள்ளி களை விட கே.வி., பள்ளிகள் அதிகபட்சம், 97.78 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளன. தற்போது, ‘டர்ணோத்ஷவா’ என்ற திட்டம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 1 செல்லும் முன் மொழி, விளையாட்டு, யோகா, கவுன்சிலிங், சேவை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். மதுரை உட்பட சில இடங்களில், 11 கே.வி., பள்ளிகள் துவங்க, பரிசீலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Theme by Anders Norén