தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 6.8.2017 அன்று நடத்திய குரூப்-2 தேர்வில், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். அவற்றை ஆய்வு செய்ததில் 2,229 சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அவர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்க்க தேர்வாணையம் முடிவு செய்தது. அதன்படி, அந்த 2,229 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக கலந்துகொள்ள அழைப்பு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார்.