தெற்கு ரெயில்வேயில் 257 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மத்திய ரெயில்வேயின் கீழ், சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வே மண்டலம் செயல்படுகிறது. தற்போது இந்த மண்டலத்தில் ‘சபாய்வாலா’ பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது கீழ்நிலை அலுவலக பணிகளாகும். மொத்தம் 257 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 130 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 69 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 19 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந்தேதியில் 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-8-2019-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.sr.indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்