April 20, 2024
தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசுபள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களைநிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம்விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலிஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசுமேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச்சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். “கேள்வித்தாள் கடினமாக இல்லை,அதே வேளையில் சுலபமாகவும் இல்லை” என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரஅடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில்சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவதுஇதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிவழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றம் | சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு முடிவு | 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது எனபல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி. துரைசாமிபொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டம்நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்குபி.துரைசாமி தலைமை தாங்கினார். கல்விக் குழுவின் உறுப்பினர்கள், பல்கலைக்கழகபதிவாளர் எஸ். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறுமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழுஅறிவுறுத்தியபடி, தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்லூரி முடிந்து 2ஆண்டுகளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவது என முடிவுசெய்யப்பட்டது. விபத்து, குழந்தைப்பேறு போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில்கூடுதலாக 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படும். மேலும் பாடத்திட்டத்தில் ஒழுக்கம், ஊழல்தடுப்பு, ஊழல் தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள், சிபிஐ செயல்பாடு ஆகியவற்றைசேர்க்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புதியதொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்குஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், 2019-19 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறைகளில்மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி தீர்மானங்கள் மீதுவிவாதம் நடத்தப்பட்டது. அப்போது வணிகவியல் பாடத்தில் ஜிஎஸ்டி தொடர்பானபாடங்களை சேர்க்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட துணைவேந்தர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை...
அரசு ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிக்க 5 மாதம் தேவை உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய அரசு அனைத்துதுறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன- அரசு அரசு...
நாட்டில் முதல் முறையாக ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் 40...
தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன...
தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பாக ஆஜராகியுள்ளார். அரசு ஊழியர்கள்...
பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும் *தேசிய திறந்தநிலை பள்ளி...
மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி...
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம்சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக உடுமலையை சேர்ந்த கிருத்திகா...
B.Ed Equivalent பெற்றுத்தர வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் முன்பு பி. எட். Equivalent பெற்றுத்தர வேண்டி பட்டதாரி...
திறன் மேம்பாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் வே.அன்புசெல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், தொழில் பழகுநர்கள், தொழிற்சாலை பணியாளர்களின்...
நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி | பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசனை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு சார்பில்...
மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர்...
பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம்...
வால்பாறையில் கன மழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18 )விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் தாலுக்காக்களில்...
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக...
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர்...
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு...
போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம்தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையைஅடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம்ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகஅரசு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடைவிதித்திருந்தது. எனினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தைதொடர்ந்து வந்தனர். இதன்பின் போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில்ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்கஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்ஆஜராகினர். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்பவேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும்தடையை மீறியும், உத்தரவுகளை மீறியும் அரசு ஊழியர்கள் ஏன் போராட்டத்தில்ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள்கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில்காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளைஉத்தரவிட்டது. போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அப்புறப்படுத்தப்படுவார்கள். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே ஐகோர்ட் எச்சரிக்கையைஅடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோநிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள்அறிவித்துள்ளனர். இன்றே பணிக்கு திரும்புங்கள் இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசுஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.வெள்ளிக்கிழமை புனிதமான நாள் என்பதால் இன்றே பணிக்கு திரும்புங்கள் எனநீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில்ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள்உத்தரவிட்டுள்ளனர். ஊழியர்களை விடுவிக்க உத்தரவு அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
மத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில்வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு | மத்தியதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம்மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில்இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்தியவேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது:சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகவளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை,முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புபயின் றோர் பங்கேற்கலாம். முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குவேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிஇலவசம். முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக முகாம்நடைபெறும் இடத்துக்கு வந்து பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். எனவே, இந்தவாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் தொடர்பானகூடுதல் விவரங்களுக்கு 044-22500540, 22500560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் | புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் கடந்த11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழுகூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ – ஜியோ அமைப்பின்கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில்ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவுஎடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்றுபணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒருபிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜாக்டோ – ஜியோ போராட்டம் குறித்த...
ஓய்வூதியம் என்பது மிக முக்கிய மான ஒரு கோரிக்கை. 30, 35 ஆண்டுகள் உழைத்த ஒருவர் வயதான காலத்தில் தனது குடும்பச் செலவையும்,...
அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, ‘டிஜிட்டல்’ விபர பதிவு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள...
தி இந்து:தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?? Cps திட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது (CPS வரலாறு)...
ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் மற்றும் அரசு...
சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில்,...
தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. நாளை முதல், கல்வியாளர் குழு மூலம், ஆய்வு பணிகள் துவங்க...