RB SPECIAL EXAM ANSWER KEY DOWNLOAD | தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு.

தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசுபள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களைநிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம்விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலிஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசுமேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச்சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். “கேள்வித்தாள் கடினமாக இல்லை,அதே வேளையில் சுலபமாகவும் இல்லை” என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரஅடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில்சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவதுஇதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிவழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

PGTRB APPOINTMENT COUNSELLING ON 19.09.2017

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:- அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர்வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.  முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில்…

Read More

PGT APPOINTMENT COUNSELLING | புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்

PGT APPOINTMENT COUNSELLING | புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

Read More

மாவட்டம் தாண்டி தேர்வு மையம் : சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணிஇடங்களுக்கு, 1,325 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 23ம் தேதி, எழுத்துத் தேர்வை நடத்துகிறது.  ‘ஹால் டிக்கெட்’: இதில், தமிழக அரசு பள்ளிகளில், தற்காலிகமாக பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், கவின் கலை கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டம் முடித்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்வு எழுத, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, ஆன்லைனில் நேற்று முன்தினம், ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட்டது. தாமதம் : ‘ஹால் டிக்கெட்’ பெற்ற தேர்வர்கள் பலர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு, வேறு வேறு மாவட்டங்களில், தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர்…

Read More

TRB POLYTECHNIC HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT.POLYTECHNIC COLLEGES 2017 – 18 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET

DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT.POLYTECHNIC COLLEGES 2017 – 18 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET | Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 HALL TICKET TRB issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 vide Advertisement No.06/2017, dated 28.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to…

Read More

TRB POST GRADUATE ASSISTANTS PROVISIONAL SELECTED LIST DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2016 – 2017 – PLEASE CLICK HERE FOR INDIVIDUAL QUERY, PROVISIONAL SELECTED LIST

TRB POST GRADUATE ASSISTANTS PROVISIONAL SELECTED LIST DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2016 – 2017 – PLEASE CLICK HERE FOR INDIVIDUAL QUERY, PROVISIONAL SELECTED LIST | Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade – I – 2016 – 2017 Provisional Selection List After Certiificate Verification As per the Notification No.03/2017 published on 09.05.2017, the corrigendum notification 03A/2017 issued on 30.05.2017 and the addendum issued on 30.06.2017 the Board conducted Written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical…

Read More

TRB SPECIAL TEACHERS HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS IN SCHOOL EDUCATION AND OTHER DEPARTMENTS FOR THE YEAR 2012 – 2016 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET

TRB SPECIAL TEACHERS HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS IN SCHOOL EDUCATION AND OTHER DEPARTMENTS FOR THE YEAR 2012 – 2016 – PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET | Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012-2016 HALL TICKET TRB issued Notification for the Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012-2016vide Notification No.05/2017, dated 26.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the…

Read More

பாலிடெக்னிக் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு

பாலிடெக்னிக் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு | அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், இணை பேராசிரியர் கள் மற்றும் உதவி பேராசிரியர் களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்று புதிய கல்லூரியை தேர்வுசெய்த ஆசிரியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதலுக் கான உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பாலி டெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பாலிடெக்னிக்குகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More