
அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆரம்பமாகி உள்ளது. ஜூன் 15-ந் தேதி வரை இவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வெளிநாட்டு மாணவர்களும் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். ஜூன் 21-ல் இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு ஜூன் 22-ல் கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல் இந்திய மாணவர்களுக்கும் இணையதளம் வழியாகவே கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.