பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | வருகிற பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்துள்ளனர். இந்த அரசை பொறுத்த வரையில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்ட நூலகங்களில் தொடங்கப்படும். மாணவ-மாணவிகளிடையே மன அழுத்தத்தை…

Read More