திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி. படித்தவர்களுக்கு அரசு பணிகள், பதவி உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில்…

Read More

4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல் | மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகள் மீதான வருடாந்திர அறிக்கையின்படி, 2016, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி பல்வேறு துறைகளில் 4,12,752 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 36,33,935 ஆகும். மேலும் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Read More