அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல் நடந்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி வெளியானது. அதில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பில் மொத்தம் 2,020 பேர் கலந்துகொண்டனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. அவர்களில், 220-க்கும்…

Read More

TNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்

TNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் | குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை 17 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணம் ரூ.100-ஐ இதுவரை செலுத்தாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த 15-ந்தேதி(நாளை) நள்ளிரவு வரை அவகாசம் உள்ளது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் APPLICATION STATUS என்ற இணைப்பினை ‘கிளிக்’ செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இணைய வங்கி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியே பணம் செலுத்தியும்…

Read More