பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் (30.11.2017) முடிகிறது

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் (30.11.2017) முடிகிறது | அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30-ம் தேதி) முடிவடைகிறது. தமிழகத்தில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாததால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். அவ்வப்போது ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு வழிகளில் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய…

Read More