பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.…

Read More

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு | மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்துவகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில…

Read More

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் நேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் செங்கோட்டையன், பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2,676 விலையில்லா மடிக்கணினிகளை வழங் கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். நார்வே, அமெரிக்கா, ரஷியா,…

Read More