பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் 13.11.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் 13.11.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது: கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடந்த பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை (நவம்பர் 13) பிற்பகல் முதல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவுசெய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில், ‘Application for retotalling/Revaluation’ என்ற தலைப்பில் கிளிக் செய்து…

Read More

ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு ஜனவரி 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ் வளர்ச்சியை கருத்திற்கொண்டு வளர்ந்துவரும் கணினி யுகத்திற்கேற்ப தமிழ் மொழியை கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும் என்றும், விருது தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அவ்வறிவிப்பின்படி ஆண்டுதோறும் சிறந்த மென்பொருள் தெரிவு செய்யப்பட்டு மென்பொருளை தயாரித்த தனிநபர் மற்றும் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனி நபர், நிறுவனத்திடமிருந்து…

Read More

8-ம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

8-ம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் | ஜனவரி 2018-ம் ஆண்டு நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 2018 ஜன.1-ம் தேதி பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். www.dge.tn.gov.in-ல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்குச் சென்று நவ.15 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) வரும் 27 முதல் 29-ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என ரூ.175 செலுத்த வேண்டும். முதன்முறை தேர்வெழுதுவோர் டி.சி., பதிவுத்தாள், பிறப்புச் சான்றிதழ் நகல்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே தோல்வியடைந்த பாடத்தை எழுத, மதிப்பெண் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

Read More