உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை மத்திய மந்திரிசபை ஒப்புதல்

உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை மத்திய மந்திரிசபை ஒப்புதல் | உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்கப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில், சி.பி.எஸ்.சி. நடத்தி வரும் நுழைவுத்தேர்வுகளை மட்டும் இந்த முகமை நடத்தும். பிறகு, படிப்படியாக மற்ற நுழைவுத்தேர்வுகளையும் நடத்தும். தற்போது, மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’…

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு | மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த எல்.முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துதர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகள், உரிமைகளுக்கு கல்வி நிலையங்கள் மதிப்பளிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.…

Read More